யாழ்ப்பாணக் கோட்டைக்கு அண்மையில் சென்று பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது .யுத்தம் முடிவடைந்த நிலையில்; சுற்றுலாப் பயணிகளைக்கவரும் விதமாக மிகத்தீவிரமாக இதன் புனரமைப்புப் பணி இடம்பெற்றுக் கொண்டிருப்பதை பார்த்தேன் .சுமார் 100க்கும் மேலான தொழிலாளர்கள் அங்கு வேலைசெய்து கொண்டிருந்தார்கள் அகழியைத் தாண்டியுள்ள சுவர்கள் புனரமைக்கப்படுகின்றது என்று பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட கம்பிகளின் மூலம் அறிந்து கொண்டேன்.
அகழியைத் துப்பரவாக்கிய சகதிகள் வெளியே சுற்றியுள்ள பிரதேசங்களில் கொட்டப்பட்டுள்ளது.யாழ்ப்பாணக் கோட்டையை புதுப்பிக்கும் செயற்திட்டத்திற்கு 104 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 1618 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போர்த்துக்கீஸர் இந்தக் கோட்டையை அமைத்தனர். அதன்பின்னர் 1658 இல் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய ஒல்லாந்தர் இக்கோட்டையை மேலும் விஸ்தரித்து புனரமைத்தனர்.அதற்குப்பின்னர் இப்போது புனரமைப்புப்பணி நடைபெற்றுக் கொன்டிருக்கின்றது இந்தப்புனரமைப்புப் பணியானது 2010 ஆண்டு நவம்பர் மாதத்திற்க்குள் முடிவடையும் என தொல்பொருள் ஆய்வியல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலா பயணிகளுக்கு தேவைப்படும் சகல வசதிகளையும் உள்ளடக்கியதாக இப் புதுப்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப் புதுப்பித்தல் நடவடிக்கையின் பின் யாழ்பாணத்தில் கோட்டையை சுற்றுலா பயணிகளை இலக்காக கொண்ட சுற்றுலா மையமாக பெயரிடுவதற்கு அரசு தீர்மானித்துள்ளது சர்வதேச நாடுகளிற்கும் இலங்கையில் ஏனைய பிரதேசங்கிளில் இருந்தும் வரும் சுற்றுலா துறையினரைக் கவரும் விதமாக அமைக்கப்படும் இதனால் நாட்டில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிக்கும்.
இந்த கோட்டையின் சுவர்கள் பழுதுபார்க்கும் நிலையில் இருப்பினும் கூட கோட்டையினுள் உள்ள மிக பழமை வாய்ந்த டச்சு தேவாலயம் பழுது நீக்க முடியாத நிலையில் இருப்பதாக தொல்பொருள் துறை இயக்குனர் Dr.செனரத் திசநாயகா ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தங்களின் விஜயத்தின் பின்னராவது நல்லது நடந்தால் சரி..
ReplyDelete