Thursday, June 30, 2011

டாவின்சியின் தசாவதாரம்.

திருடன் ஒருவன் உலக மகா மோனாலிசா ஒவியத்தை திருடிக்கொன்டு போய்விட்டான்.கானாமல் போன பிறகும் ஒவியம் வைக்கப்பட்டிருந்த வெற்றிடத்தைப் பார்க்கவே கூட்டம் கூடியது
லியனார்டோ டாவின்ச
இவரைத்தெரியாதவர் யாரும் இருக்க முடியாது  மோனாலிசா ஒவியத்தை வரைந்ததன் மூலம் அனைவரின் கவனத்தயும் தன் பால் திருப்பிக் கொன்டவர் இன்று வரை அப் புன்னகைக்கு ஈடாக அவர் வரைந்த ஓவியம் மட்டுமே கானப்படுகின்றது
ஆனால் இவர் ஒர் ஒவியர் மட்டும்மல்ல ஒர் தேர்ந்த சிற்பி சிறந்த கவிஞர் இசைவிற்பனர் தத்துவமேதை விளையாட்டு வீரர் கட்டிடக்கலைஞர் இ கடல் ஆராச்சியாளர் வானியல் விஞ்ஞானி நீர்பாசன நிபுணர் ராணுவ ஆலோசகர்
இப்படி இவர் எடுத்த ஆவதாரங்கள்  பத்திற்க்கு மேல்
ஐநூறு ஆண்டுகளுக்குப் பின்பு மனிதன் கண்டுபிடிக்க இருக்கும் ஹெலிகப்பட்டரிலிருந்து பீரங்கி வரையிலான பல கண்டுபிடிப்புகளைத்தாண்டி தொலை நோக்கோடு கற்பனை செய்து  காகிதத்தில் வரைந்தார் இவர்
விமானமோ ஹெலிகப்பட்டரோ கண்டுபிடிக்காத காலத்திலயே இவர் பரசூட்டைப்பற்றி தூரிகையால் கற்பனை செய்தார் கடிகாரம் கண்டுபிடிக்கப்படாத அந்த நாளில் அலாரம் வரை சிந்தித்தார்
தாயின் கருப்பையில் குழந்தை எப்படி இருக்கின்றது என்று கூட இவரின் கற்பனை விசாரனை செய்ததது!ஒவியத்தில் ஒளியையும் நிழலையும்  ஒரு சேரக் கொண்டுவந்த முதல் ஓவியரும் இவர் தான் ஒளியையும் நிழலையும் இவர் கவனிக்க ஆரம்பித்தபோது கண்களைப்பற்றி ஆராய ஆராய ஆரம்பித்தார் .








ஆதாமின் மறுபிறப்பு

உயிரற்ற உடம்பாக இருந்த ஆதாமின் சுண்டு விரலை இறைவன் தீண்ட ஆதாம் உயிர்பெற்று எழுந்ததாகச் சொல்லும் பைபிள் காட்சியை மைக்கேல் ஏஞ்சலோ தன் துரிகையால் படைத்தபோது ஆதாம் இரண்டாவது முறையாக உயிர் பெற்றான்!
கலை என்பது என்ன என்பதை இவன் வடிக்கப்போகும் சிற்பங்களிலிருந்து ஓவியங்களில் இருந்தும் உலகம் அறிவதாக மைக்கல் ஏஞ்சலோவை படைக்கும் போது இறைவன் இப்படி அறிவித்ததாக ஒரு நம்பிக்கை யாதார்தம் தத்துரூபம் என பார்போரை மெய்சிலிர்க்க வைத்த இவரின் படைப்புக்கள்  இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன இவர் இல்லாத இந்த உலகிலும்