Monday, July 4, 2011

பிரான்ஸ் கலைகளின் தலைநகர் !

மன்னன் என்றால் இவன் அல்லவா மன்னன் என்று பல நாட்டு மன்னர்களும் பார்த்து வியந்த ஓர் அரசன் பிரான்ஸ் நாட்டின் பதிநான்காம் லூயி!

வெர்ஸேய்ல்ஸ்


வெர்ஸேய்ல்ஸ்
திட்டமிட்டபடி நகர்புறச்சாலைகள் தெருவிளக்கு பொதுமக்களின் பாதுகாப்புக்கு பொலீஸ்  என்று பல விடயங்களை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் லூயி! தொழில் நிர்வாகம் வரிவசூல் ரானுவம் என்று அவரது ஆட்சியில் பல துறைகளிலும் பிரான்ஸ் முன்னோக்கி சென்று கொண்டிருந்தது கலையும் இலக்கியமும் அந்தக் கால ரோமாபுரிக்கு இணையாக செழிர்த்து வளர்ந்தன பிரெஞ்சு மொழிக்கு அறிஞர்களின் மொழி என்ற அந்தஸ்தும் கிடைத்தது.
தனது நாட்டின் அமைச்சர்கள் தளபதிகள் நீதிபதிகள் குறுநில மன்னர்கள் என்று நாட்டின் முக்கியமான ஐயாயிரம் பேரை நெருக்கமாக கண்காணிக்க வசதியாக இவர்களுக்குப் பணிவிடை செய்ய இன்னும் பத்தாயிரம் பேரும் ஒரே இடத்தில் வசிப்பதற்க்கு ஒர்  இடம் வேண்டாமா? இதற்க்காக தலைநகர் பாரீஸ்லிருந்து முப்பது மைல் தூரத்தில் வெர்ஸேய்ல்ஸ் இடத்தில் அதுவரை உலகமே கண்டிராத அளவுக்கு மன்னன் லூயி! ஓர் பிரமாணடமான மாளிகையை எழுப்பினான் சிலிக்கவைக்கும் ஒவியங்கள் சிற்பங்கள் நீரூற்றுக்கள் என்று அவர் நிர்மாணித்த அந்த மாளிகையின் ஒவ்வொரு சதுர அங்குலமும் ஒர் கலைப் பெட்டகம்! மகாராணி தூங்கும் மஞ்சத்தில்கூட தங்க வேலைப்பாடு.

இவரின் ஓவியத்தைப்பார்தது அன்று ஹிட்லர் இது என்ன பைத்தியக்காரத்தனம் என்றார் ஆனால்!!

இன்று நவீன ஒவியங்களின் பிரமா என்று வர்ணிகக கூடிய இவரைத் தெரியதவர்கள் யாருமே இருக்க முடியாது அவர் தான் பிக்காஸோ. பிக்காஸோவின் உலகம் தழுவிய புகழுக்கு என்ன காரணம்.ஓவியம் இப்படித்தான் இருக்வேண்டும் என்ற வரையரையைத் தகர்தெரிந்தார்.

Pablo Picasso

இக்காலப்பகுதியில் தொழில்நுட்பப் புரட்சியினால் கமராவும் தோற்றம் பெற்றது ஒவியர்கள் செய்யும் வேலையை குறிப்பிட்ட நிமிடங்களில் செய்து முடித்தது இதனால் வேலையில்லாப் பிரச்சனை தலை தூக்கியது என்னசெய்வது என்று தெரியாமல் இருந்த ஒவியர்களுக்கு புதிய பாதையை திறந்து வைத்தார்