Wednesday, July 27, 2011

http://www.flickr.com/photos/sakaptham/

வானமே கூரையெனக் கொண்டு மக்கள் வாழும் அவலம்

எல்லாவற்றையும் இழந்து உயிரைமட்டும் கையில் பிடித்துக்கொன்டு தப்பி வந்த மக்களுக்கு அந்த உயிர் கூட இல்லாது போகுமானால் பிறகு எதற்கு இந்த போலியான மனிதாபிமானப் பணிகளும் மீள்குடியேற்றங்களும் செய்ற்பாடுகளும்.
வானமே கூரையெனக் கொன்டு மக்கள் வாழும் அவலம் யாழப்பாணத்தில் காணப்படுகின்றது என்றால் உங்களால் நம்பமுடிகின்றதா?




மீள் குடியேற்றம் என்ற பெயரில் அவர்கள் படும் இன்னல்கள் எப்பொழுது தான் வெளியுலகிற்க்கு தெரியவரப்போகின்றனவோ! இவ்வாறு மீள்குடியமர்தப்பட்ட மக்களின் வாழ்க்கை பல்வேறு போரட்டங்களுக்கு மத்தியில்  தொடர்கின்றது விழிகளை பிதுங்கவைக்கும் அளவிற்க்கு அவர்களின் வாழ்வாதாரம் மிக மோசமான நிலையில் கானப்படுகின்றது போர் இடம் பெற்று காலங்கள் கடந்து சென்ற நிலையிலும் போர் தந்து விட்டுப் போன வலிகளின் வடுக்கள் இன்னமும் ஆறாமல் நெஞ்சில் நெருஞ்சியாய் உருவெடுத்திருக்க நடைப்பிணங்களாய் வாழுகின்ற நிலையே தொடர்கிறது.



 நலன்புரி நிலையங்களில் இருந்தும் வெளிமாவட்டங்களில் இருந்தும் சொந்த இடங்களிற்க்கு மீள் குடியமர்த்தப்பட்ட போர் தின்ற மக்களின் வாழ்வு இன்னமும் இருக்கின்றது J/90 ஐ கிராமசேவகர் பிரிவாகக் கொண்ட பூம்புகார் மீள்குடியமர்தப்பட்ட மக்களின் வாழ்வியலின் தன்மையும் அதன் முறைமையும் எங்களை உறைய வைக்கின்றது இவ்வாறான ஒர் வாழ்வை நாம் வாழ்வோமா என சிந்தித்துப் பார்க்கையில் எம் மனதில் இனம்புரியாத ஒர் நெருடல் இன்று வரை தொடர்ந்த வாறே உள்ளது



 J/9 பாதையூடாக பேரூந்தில் இலகுவில் பயணித்த நாம் கிழக்குஅரியாலை முள்ளிச்சந்தியிலே இறங்கினோம் சந்தியில் இருந்து சுமார் 5 கிலோமீற்றர் வரை உட்செல்ல வேண்டும் என அப்போது எமக்கு தெரிந்திருக்க வில்லை கால் நடையாக தொடர்ந்தது எம் பயணம்.சிறிது தூரத்தில் வீதியோர மரத்தடியில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க மூன்று பெண்கள் தம் அருகே பனையோலைப் பெட்டியுடன் உட்கார்ந்திருந்தனா. அவர்களின் தோற்றமும் பேச்சும் கிராமத்துப் பாங்கை பிரதிபலிப்பதாக இருந்தது அவர்களிடம் நாம் சென்றடைய வேண்டிய பூம்புகார் பற்றி விசாரித்தபோது “பூம்புகாரோ அது இங்க இருந்து ஆறு கட்டைக்கு மேல இருக்குதுங்கோ நடந்தே போறீயள”; என அவர்கள் வியந்த விதம் நாம் சென்றடைய வேண்டிய தூரத்தை உணர்தியது. அவர்கள் கூறிய போது எமக்கு எற்பட்ட மனநிலை இது எம்மால் முடியுமா? என்பது தான் இந்த மனநிலையுடனேயே அங்கு நாம் கண்ட கிராமத்துக் காட்சியை கமராவில் பதித்த படியே சென்றோம.; சுமார் ஒரு கிலோ மீற்றர் எவ்வாறு நகர்ந்தது என்பதே தெரியாமலே நாவலடிக் கிராமத்தைத் தாண்டி சிறிது தூரம் சென்றபோது ஆள்அரவம் அற்ற அந்த இடத்தில் தீடிரென வாகனச் சத்தம் கேட்டது. அந்தவேளை ஆவலுடன் திரும்பிப் பார்த்தபோது றைக்டர் ஒன்று வருவது தெரிந்தது.



வழியில் சந்தித்த அந்த மூன்று பெண்களும் ரைக்டருக்குள் இருந்தார்கள். அவர்களை மறித்து அவ்வாகன ஓட்டுனரிடம் எங்களை அறிமுகப்படுத்தி பூம்புகாரினுடாகவா போகின்றீர்கள்? என்று விசாரித்தோhம் அதற்க்கு அவர் “ஓம் ஓம் நாங்களும் அதால தான் போறம் ஏன் பிள்ளைகள் இந்த உச்சிவெயிலில வெளிக்கிட்டனிங்கள்” என் வினாவினாh.; அவர்களின் அனுமதியுடன் றைக்டரில் ஏறிக்கொண்டோம் எம் வாழ்வில் முதல் தடவையான றைக்கடர் பயணம் மிகவும் சுவாரசியமாகவே அமைந்தது.றைக்கரில் பல முட்கம்பிக்கட்டுகளின் நடுவே அப் பெண்களுடன் நாம் உட்காந்திருந்தோம் நெடுந்தூரப் பாதை வழியே அவ் ரைக்டர் வேகமாக சென்ற கொண்டிருந்தது இரண்டு புறங்களும் கண்னுக்கெட்டிய தூரம் வரை வெட்டவெளியாகவே காட்சியளித்தது .


இது யுத்தத்தின் சுவடுகள் என  தெட்டத்தெளிவாக எமக்குப் புலப்படுத்தியது. அன்று பனை மரக்காடுகள் தென்னம் சோலைகள் என இருந்த இடத்தில் இன்று அதன் வேர் கூட இல்லை என்பதும் அங்காங்கே செல்வீச்சுக்களால் ஏற்படுத்தப்பட்ட பாரிய குழிகளும் என அப் பாதை தொடர்ந்தது. சுமார் நான்கு கிலோ மீற்றர் வரை திருத்தப்படாத நிலையில் குன்றுகளும் குழிகளுமாக காணப்பட்ட வீதியிலேயே சென்ற ரைக்டரின் ஓசை எமக்கு சங்கீதமாகவே ஒலித்தது.ரைக்ரரினுள் இருந்த முட்கம்பிக் கட்டுக்கள் எதற்கு என விசாரித்தோம் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதில் உயர் பாதுகாப்பு வலயமாகவே இப் பகுதி காணப்பட்டது எனவே மக்கள் சென்று வர அனுமதிக்கபடாத நிலையில் தற்போழுது மூன்று மாதங்களுக்கு முன் தான் மக்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்டனர்.எனவே இங்கு கட்டாக் காலிகளாகவே கால்நடைகள் அதிகமாக காணப்படுவதால் மக்களின் வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்க்கு அக் கம்பிகளைப் பயன்படுத்தி கூடுகளை அமைப்பர் இதற்க்குள் அவ் மேய்ச்சல் மாடுகள் சிக்கிக் கொள்ளும் எனக் கூறினார்கள். வீதியின் இரு மருங்கும் கம்பிக் கூடுகள் பல கிலோமீற்றிர் வரை அமைக்கப்பட்டிருந்ததை காணமுடிந்தது சற்றுத்தொலைவில் பற்றைகளுக்கிடையில் மழைக் காளான்கள் முளைத்திருப்பது போன்று வெள்ளைத்தறப்பால்கள் காணப்பட்டன அவ்விடத்தைக்காட்டி “இது தான் பிள்ளைகள் பூம்புகார் என்றார்கள்



எனவே நாம் றைக்ரரில் இருந்து இறங்கி அவர்களிடம் இருந்து விடைப்பெற்றுக் கொண்டோம் வீதியில் இருந்து காணிகளுக்குள் நுழையும் பிரதான பாதையூடாக அக் கிராமத்தினுள் நுழைந்தோம் .ஆரம்பத்தில் இக்கிராமத்தின் மீள் குடியமர்த்தப்பட்ட சிறுவர்களின் கல்விபற்றிய நிலையை அறிவதையையே நோக்கமாகக் கொண்டு சென்றோம் ஆனால் அங்கு சென்று பார்த்த போது தான் தெரிந்தது அவர்களின் அடிப்படை வசதிகள் கூட இன்னும் அடிமட்டத்திலேயே இருக்கின்றது என்பது அவர்களின் இருப்பிடங்கள் கிடுகளுடனும் றரப்பால்களுடனும் முடிந்து விட்டது .மழைத்தூறலுக்குக் கூட தாக்குப்பிடிக்க முடியாத குடிசைகள் என்ற நிலையில் உள்ள அக்கிராம மக்கள் நாங்கள் தங்களுக்கு ஏதாவது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தித் தருவோம் என்ற நம்பிக்கையுடனும் ஏக்கத்துடனும் நம் முகத்தைப் பார்தவாறு நம்மை நோக்கினர்

நகர்புற மக்களிடம் நாம காணாத அன்பு பாசம் வரவேற்க்கும் தன்மை. எத்தனை அழியா ரணங்கள் மனதில் இருந்தாலும் அதை முகபாவனையில் வெளிக்காட்டாத அந்தச் சிரிப்பு. .ஆனால் அவர்கள் தம் வலிகளையும் வேதனைகளையும் மனதிற்குள் சுமக்கிறார்கள் என்பதை அவர்களின் பேச்சினுடாக அறிய முடிந்தது இக்கிராமத்தில் நாம் முதலில் கண்ட பெரியவா.; .என்ன ஒர் மிடுக்கான தோற்றம்  தலமைத்துவத்தைத் தாங்கும் தன்மை அவரின் கைகளில் வெள்ளைத்தாளை சுருட்டியபடி கிராமத்தின் பிரதான பாதையூடாக ஒவ்வொரு குடும்பத்தினரடமும் நீங்க  போம் மாத்திட்டிங்களா என்று கேட்டவாறு சென்றார் அவரைப் பின்தொடர்ந்த நாம் இடைமறித்து எங்களை அறிமுகப்படுத்திய வாறு இக்கிராமம்; பற்றிய கேள்வியை எழுப்பினோம் அவர் எமக்கு நடந்து கொன்டே பதிலலித்தார் இக்கிராமத்தைப்பற்றிய தகவல்கலை கூறியவாறே இடையிடையே ஒவ்வொரு குடிசைக்கும் முன் நின்று போம் பதிந்து விட்டிர்களா என்று கேட்வாறு சென்றார்.நாம் அவரைப்பற்றி விசாரிக்கையில் தான் அக்கிராமத்தின் தலைவர் என்றும் தன் பெயர் செல்லத்துரைத் திருநாவுக்கரசு என்றும் கூறினார் மேலும் நாம் விசாரிக்கையில் பூம்புகாரில் பதிவுகளின் படி மொத்தமாக 73 குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளதாகவும் பதிவுகள்அற்ற நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்து பல கடும்பங்கள் வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார் மீள்குடியமர்தப்பட்டு மூன்று மாதங்கள் ஆகின்றன இருப்பினும் பல குடும்பங்கள் குடும்ப அட்டையை J/90 பிரிவிற்க்கு மாற்றாமல் உள்ளனர் எனவே இப்பிரிவுக்க மாற்றுவதற்கான பத்திரமே இவையென கையில் இருந்த பத்திரங்களைக் காட்டியபடி சென்று கொண்டிருந்தார் அவரின் அறிமுகத்தோடு மாதர் சங்கத்தலைவி அன்ரனி ரஞ்சனாதேவி மற்றும் மாதர்சங்கச் செயலாளர் தவராணியையும் சந்தித்தோம் மீதிப்பயணம் அவருடனே.


செல்லும் வழியில் பனையோலையினாலே சில வீட்டு வேலிகள் அடைக்கப்பட்டிருந்தன ஏனைய வீடுகள் மேற்கூரைகள் கூட இல்லாத நிலை கவலைக்கிடமான விடயமே. .கதவுகள் இல்லாத குடிசைகள் இரண்டு சுவர்கள் மாத்திரம் கொண்ட வீடுகள்.மரத்தடியில் வாழ்க்கை என  வெட்டவெளியில் அவர்கள்படும் இன்னல்கள் தான் எத்தனை?





சிறிது தூரம் தாண்டிய பின் அங்கே கண்ட காட்சி எங்களை ஸ்தம்பிதம் அடையச்செய்தது  கொழுத்தும் வெய்யிலில் சுமார் 65 வயதைத்தாண்டிய போதும் தனது குடிசையை தானே அமைக்கும் கொடுமை. பார்த்தவுடனே கலங்காத நெஞ்சமும் ஒரு கணம் கலங்கிவிடும் அடுத்தடியை எடுத்துவைக்க நம் கால்கள் மறுத்தன .சிறிது தொலைவில் அங்கு மண்பிட்டியில் வட்டமேசை மாநாடொன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது ஆம் வேப்பமர நிழலின் மணலிலே நான்கு சிறுவர்கள். தங்கள் எதிர்காலம் குறித்து அறியாத பிஞ்சுகளும் தம் பிள்ளைகளின் கல்விப்புலத்தை நினைத்து ஏங்கும் பெற்றோர்களும். நடந்து முடிந்த யுத்தம் கடந்த காலத்தை மட்டும் பாதிக்கவில்லை இனி வாழ வேண்டிய வருங்கால சந்ததியின் வாழ்க்கையையும் பாழாக்கிவிட்டிருப்பதை உணர்ந்தோம்.
போர் தந்த வலி போதாதென்று இன்று மீள்குடியேற்றப்பட்ட பெயரில் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி உள்ள சிறார்களின் கல்வி என்னாவது? இவர்கள் செய்த தவறுதான் என்ன? சூழ்நிலைக்கைதிகளாக்கப்பட்ட இவர்களின் வாழ்விலும் விடியல்; ஒன்று வராதா இதை நினைத்துக்கொண்டிருந்த போது. மெல்லிய சத்தம் “யார் ராணியக்க இவங்க.. என்ற கேள்வியுடன் ஆரம்பமானது .தவராணி அவர்கள் எம்மை அறிமுகப்படுத்தினர் நாங்கள் எங்கிருந்து வருகின்றோம் என்று கூறியும் சரியாக விளங்கிக் கொள்ளாத அந்தத் தாய் “எங்களுக்கு என்ன செய்வீனமமாம் ராணியக்கா. பிள்ளைகள் இங்க பாருங்கோமா பெரிசா ஒண்டும் செய்யவேண்டாம் இங்க மலசலகூடவசதி துப்பரவா இல்ல. பொம்பிளங்க நாங்க படுற பாட்ட பாருங்கோ அப்ப தெரியும்…என்று இடைவிடாமல் இக்கிராமப் பிரச்சனைகளை செல்லிமுடித்தார். நாம் கேட்டோம் “அம்மா இங்க பாடசாலை இயங்குகின்றதா? எங்கு இருக்கு? அதைப்பற்றி எதாவது….என்று எங்கள் கேள்வி முழுமையாக பூர்த்தியடைய முதல் அவரின் ஆதங்கமான பேச்சுத் தொடர்ந்தது “பாருங்க பிள்ளைகள் அது தான் பள்ளிக்கூடம் அது கிடக்கிற கேவலத்த பாருங்க அந்த ஆதங்கமான பேச்சுக்கு நடுவில் இடையிடையே அரசியல்வாதிகளுக்கும் சுவாரசியமான அப் பெண்ணின் பேச்சு. அக்கிராம மொழிநடை காய்ந்து போன முகம் வெற்றிலைசப்பிய வாய் என மிக அழகான தோற்றம்


அவர் பாடசாலையை கைநீட்டிக் காட்டினார் பாடசாலைக் கட்டிடம் இதுவா என வாயில் விரலைவைக்கம் அளவிற்க்கு அதன்தோற்றம் அவர் கோவப்பட்டதற்குரிய காரணம் அப்போது புரிந்தது எமக்கு





சிறிது தூரத்திற்கு அப்பால் மிகச்சிறிய வீடு. ஆம் அதுவே பூம்புகார் அரசினர் தமிழக் கலவன் பாடசாலை. தவராணியின் உதவியுடன் அங்கு சென்று பார்தோம் அரைவாசிக் கூரையுடன் ஒரு அறை கொண்ட வீடு பார்கும் போதே இனம்புரியாத கவலை ஒரு பாடசாலை கரும்பலகை கூட இல்லாமல் இயங்குகின்றது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?. கூரையே சீராக இல்லை. கரும்பலகை பெரிய விடயம் கிடயாது தானே! இருபது பிள்ளைகள் கல்விகற்பதாகவும் தரம் ஒன்றில் இருந்து தரம் ஐந்து வரை அனைத்து வகுப்புக்களுமே ஒன்றாக தான் நடைபெறுகின்றனவாம.ஒன்றை சிந்தித்துப் பாருங்கள் நமது இடங்களில் தரம் ஐந்தாம் ஆண்டில் பிள்ளைகள் படிக்கிறார்களோ இல்லையோ அப் பிள்ளைகளின் பெற்றோர்கள் புலமைப்பரிசில்பரீட்சைக்காக எங்கு எல்லாம் வகுப்புக்கள் இடம் பெறுகின்றனவோ அங்கு எல்லாம் பிள்ளைகளை விட்டுவிட்டு வெளியே காவல் நிற்பார்கள். இதற்க்கு பொருளாதாரம் ஒரு தடையல்ல. அனைத்து தரத்தில் உள்ள பெற்றோர்களின் நிலையும் தற்போது இது தான். இவ் ஆசை அம் மக்களுக்கு இருக்காதா ஏன்? தாங்கள் புலமைப்பரீட்சையில் சித்தியடைய வேண்டும் என்று மாணவாகளுக்கும் தான் எண்ணம் இருக்காதா?
.இதை யோசியுங்கள் தரம் ஒன்று மாணவர்ளுடன் தரம் ஐந்து மாணவன் அப்படி என்னதான் சேர்ந்து படிப்பான். ஆசிரியர்களும் எதை சொல்லிக்கொடுப்பார்கள். இவை தவிர்ந்த மீதித் தகவல்களையும் அவரிடமே; பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது. இங்கு வெளி இடங்களில் இருந்து தான் இரண்டு அசிரியர்கள் வந்து கற்பிப்பார்கள் எனவும் ஆசிரியர் பற்றாக் குறையை நிவர்த்தி செய்ய தானும் சென்று கற்பிப்பதாகவும சொன்னார். இங்கு கற்பிக்கும் ஆசிரியர்களின் பெயரையோ அவர்களைப் பற்றிய ஏனைய தகவல்களையோ அறிய முயற்சி செய்தும் அக் கிராமமக்களுக்கு  தெரிந்திருக்கவில்லை.


எனினும் அப்பாடசாலை அதிபர் திரு.கணேஸ்வரன் என்பதை தெரிந்து கொண்டோhம். தரம் ஜந்திற்கு மேல் இருப்பவர்கள் இக் கிராமத்தில் இல்லையா? அவர்கள் எங்கு பாடாலைக்கு செல்கின்றனர் என்று கேட்டதற்க்கு “ஒன்பது பிள்ளைகள் வெளியிடப்பாடசாலைகளுக்கு சென்று கல்விகற்று வருவதாகவும் தரம் ஐந்திற்குள் உள்ள பிள்ளைகள் மட்டுமே இங்கு படிப்பதாகவும் சொன்னார்;;;;….அவருடனே இக்கிராமத்தைப்பற்றி கதைத்தபடி சென்றோம.;




இப் பாடசாலை மாணவர்களை சந்திக்கலாமா? ஏனக் கேட்டோம் “உங்களுக்கு தெரியும் தானே இது லீவு நாள் அவங்க எங்கயாவது விளையாடிக் கொண்டிருப்பாங்க என்றார்” எம்மை அவர்களின் வீட்டிற்கு அழைத்து செல்லும்படி கேட்டோம் அவரும் எந்தவித மறுப்பும் இல்லாமல் ‘எனக்கு தெரிந்த வீடுகளுக்கு கூட்டிக்கொண்டு போகின்றேன்” என்று கூறிக் கொண்டே தொடர்ந்தார்.கடற்கரைக்கு அண்மையிலுள்ள ஒர் குடிலுக்கு அருகில் தேமா மரத்தடியில் ஐந்தாறு சிறுவர்கள் விளையாடிக் கொன்டிருந்தார்கள்



எனவே அவர்களை நோக்கிச்சென்றோம் “என்ன குழப்படி செய்கிறீர்களா? வீட்டுப்பாடம் எல்லாம் செய்திட்டிங்களா? செய்யாம வாங்கோ நாளைக்கு நல்ல அடி தருவன் என்று அவரின் அதட்டல் அங்கும் விட்டுவைக்கவில்லை. ஆங்கு சுவாரசியமான விடயம் ஒன்றும் இடம்பெற்றது தொடர்ந்து சிறுவர்களிடம் பல கேள்விகளைக் கேட்டோம் என்ன ஆச்சரியம் தரம் ஏழு படிக்கும் மாணவன் இக் கிராம பாடசாலையில் படிப்பதாக தன்னை அறிமுகப்படுத்தினான். மறுமுறையும் கேட்டோம் நீங்கள் எத்தனையாம் வகுப்புப் படிக்கிறீங்க என்று அவன் ஏன் அக்கா  நான் ஏழாம் ஆண்டு தான் படிக்கிறன் என்றான் நமது அருகில் நின்ற தவராணி அதிர்சியடைந்துவிட்டார் “டேய் நீ சதீஸ்ல்லே”நீ எழாம் ஆண்டோ. எங்களைப்போலவே அவரும் ஆச்சரியப்படுகின்றார் என்றால் நீங்களே யோசியுங்கள்


தமது மண்ணில் மீளக்குடியேறிவிடவேண்டும் என்ற அவாவுடன் குடியேறிய மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் படும் அவலம் சொல்லிப்புரியுமா? சொல்லில் தீருமா? பூம்புகாரின் கடற்கரையோரப்பகுதியில் வசிப்பவர்கள் தமது பிரதான தொழிலாக கடற்றொழிலையே மேற்கொண்டு வருகின்றனர்.

Tuesday, July 26, 2011

மீளாத வடுக்களுடன் மீள்குடியேற்றப்பட்ட மக்கள்

நாவலடி மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வியல் அவலநிலை பற்றிய ஓர் நேரடி ரிப்போட் என் முதலாவது பயணம்




இந்த வகையில் யாழில் உள்ள அரியாலை கிழக்குப் பகுதியில் உள்ள நாவலடி பூம்புகார் மற்றும் கிழக் அரியாலை எனப்படும் மூண்று மீள்குடியேற்றக் கிராமங்கள் நிர்மானிக்கப்பட்டுள்ளன இவற்றுள்   J/ 90 ஐ  கிராம சேவையாளர் பிரிவாகக் கொண்ட மக்களை பல்வேறு சிரமங்களின் மத்தியில் செவ்வி கான சந்தர்பம் கிடைத்தபோது.

முதலில் நாம் அக் கிராமத்தின் வாயிலில் உள்ள ஓர் சிறிய கடையில் விசாரித்தோம் அவரின் உதவியுடன் அக் கிராமத்திற்குள் நுழைந்தோம் தகரத்தினால் வேயப்பட்ட  சிறிய சிறிய குடில்கள் மிகவும்  நெருக்கமாகவும். மழை ஓய்ந்தும் அங்காங்கே தேங்கி நிற்கும் வெள்ளங்கள். ஆரம்பம் எது முடிவு எது என குழம்பும் அளவிற்கு பாதைகள் என பார்தவுடனே மனதை வருடும் காட்சிகள் தொடர்ந்தன

தொடர்ந்து பல குடிசைகளை தான்டி இக்கிராமத்தின்  தலைவியாக செயற்படுகின்ற சன்முகதாஸ் விக்னேஸ்வரியையே முதலில் சந்தித்தோம். அக்கிராமத்தைப் பற்றிய அனைத்து விடயங்களும் அவருக்கு அதிகமாகவே தெரிந்திருந்தது நாம் கேட்டதை விட மேலதிகமாகவே தகவல்களை பெற்றுக் கொன்டோம 1995ம் ஆண்டு ஏற்பட்ட இடப்பெயர்வின் பின் சென்றவருடம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி இக் கிராமத்தில் 130 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டன என்றும் ஆரம்பத்தில் பெரும்பாலான வீடுகளை இரானுவத்தினரே கட்டித்தந்தார்கள் என குறிப்பிட்டார்.


 இம்மக்களுக்கு அரசாங்கம் மற்றும் அரசசார்பற்ற நிறுவனமான கரித்தாஸ் கீயூடேக் பல உதவிகளை வழங்கிய போதும் தமது அடிப்படைத் தேவைகள் ஒரு வருடமாகியும் நிறைவு செய்யப்படவில்லை எனவும் ஆரம்பத்தில் குடிநீர் வசதி மிகப்பெரும் பிரச்சனையாக இருந்ததாகவும் தற்பொழுது கரிதாஸ் கீயூடேக் நிறுவனம் பாலடைந்த கிணறுகளை புணர்நிர்மானம் செய்ததனால் தற்போது பிரச்சனைகள் இல்லை எனவும் தெரிவித்தார்.
 


 
 
இருப்பினும் மலசலகூட வசதி இன்மையினாலும் மின்சார வசதிகள் இன்மையாலும் பல இன்னல்களை எதிர்நோக்குவதாகவும் கூறினார். மணியம்தோடடத்தில் உள்ள மீள்குடியேற்ற கிராமங்களுக்கு மின்சாரம் வந்துவிட்டது எனவும் பலமுறை மனு கொடுத்தும் இதுவரையும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை வருகின்ற மாதம் இதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும் என சிறுகைத்தொழில் அமைச்சர் டக்களஸ் தேவானந்தா கூறியதாக தெரிவித்தார்
 
இங்கு கடைகள் இருக்கின்றன இருப்பினும் அத்திய அவசிய பொருட்கள் வாங்குவதாயின் பல கிலோமீற்றர் தூரம் செல்ல வேன்டியுள்ளது என்றார்
தொடந்து மூதாட்டியான கந்தையா ரத்தினம் அவர்களை சந்தித்தோம்
 
 


 
 தனது சிறிய குடில் வாயிலில் கால்களை நீட்டியவாறு சுழகில் அரிசியை பரப்பி விட்டு ஏதோ முனு முனுத்த படி உட்காந்திருந்தார் எமது கேள்விகளுக்கு எந்தவித சலிப்பும் இன்றி பதில் சென்னார் தனக்கு ஏழு பிள்ளைகள் இருப்பினும் தான் தற்போது இக் குடிசையில் தனியே வசிப்பதாகவும் சொன்னார். சொல்லும் போதே கண்னிருடன் தனது சேலை தலைப்பினால் கண்களை துடைத்தவாறு சுதாகரித்துக் கொன்டார். மாதாந்த உதவிப்பணம் நூறு ருபாய் வருவதாகவும் நிவாரனம் தனக்கு போதியதாக உள்ளது எனவும் மலசலகூடம் இல்லாததால் அயல் வீடுகளுக்கு வயதுபோன காலங்களில் செல்ல வேண்டியுள்ளதாகவும் மற்றும் மின்சாரம் இல்லாததால் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்குவதாகவும்; சொன்னார். ஏதோ முணுமுணுத்தவாறு குடிலுக்குள் சென்றார்.
 

அவரிடம் விடைபெற்று கொண்டு திரும்பும் போது”யார் பிள்ளைகள் நீங்கள்” எனறு விசாரித்தவாரே நெருங்கினார் திருமதி.தம்பிராசா அவரிடம் இருந்தும் பல தகவல்களை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது அரசாஙகம் வாழ்வாதார கடன் மற்றும் சிறு கைத்தைழிலுக்காக கோழி மற்றும் ஆடு மாடு வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்
 
 
இதனால் தமது வருமானங்களை உயர்தி கொள்ளக் கூடியதாக இருக்கின்றது என்றார் மீள் குடியேற்றப்பட்ட போது அரசாங்கத்தினால் எட்டு பக்கற் சீமெந்தும் ஐயாயிரம் ருபாய் காசும் தந்ததாகவும் பத்து குடும்பங்களுக்கு தகரம் வழங்கபட்டதாகவும் விதை நெல் விவசாய பயிற்சி நிலையதினால் வழங்கபட்டதாகவும் சொன்னார்.  

இதனையும் சொல்லியே ஆகவேண்டும் இன்னுமொரு வீட்டின் வாயிலில் சுமார் ழூன்று வயது மதிக்கத்தக்க பெண்பிள்ளை இரண்டு உடைந்த விளையாட்டு காரை வைத்து உருட்டியபடி இருந்தது. நாம் அழைத்தபோது வெளியே வந்த யுத்ததினால் தனது கனவனை இழந்த அக் குழந்தையின் தாய் வீரசிங்கம் கொளரி “வாங்கோ எங்க இருந்து வாரிகள் என்ற கேள்வியுடனே தனது தலையை சரிசெய்து கொன்டு வந்தார் நாம் பதில் சொன்ன மறுகனமே இங்க உங்கள மாரித்தான் எத்தினபேர் வந்திட்டினம் ஒரு பிரியோசனமும் இல்ல ஏதோ அத செய்யிறம் இத செய்யிறம் என்டுட்டு மாதத்தில நாலஞ்சு பேராவது வந்திடுவினம். என தொடர்ந்தது அவரின் பேச்சு. நாம் என்ன செய்ய? வெறும் மௌனம் மட்டுமே அது தான் பொருத்தம் அந்த நேரத்தில்.
வலிகளின் இழைகளுக்குள் இறுக்ப்பட்ட உணர்வுகளை வெளிக்கொணர்ந்து விட்டேனோ என தோன்றியது இவ் உறவுகளுக்காக என்ன செய்திருக்கிறோம் எதையும் சிந்திக்க முடிவதும் இல்லை.. சிந்தித்தாலும் செயற்படுத்த முடிவதில்லை. அவரைப்பற்றிய வேறு எந்தத் தகவலும் அறியமுடியவில்லை எனினும் நாம் அந்த வீட்டு வாயிலை விட்டு நகரும் வரையும் அக் குழந்தை க்கு விளையாட்டில் தான் முக்கவனமு கவனமும் இருந்தது. .நம்முடைய பயனத்தில் இவ்வாறான சுவாரசியமான நிகழ்வும் நடந்தது.
காலமும் வாழ்வும் இருவேறு திசைகளில் பயணிக்கையில் பிரிவு என்பது நிச்சயிக்கப்பட்டவையே
அத் தாயின் மனநிலையின் வெளிப்பாடே அது.

மேலும் சுதாகரன் விமலா தெரிவிக்கையில் பாடசாலை நேரங்களில் பேருந்து வருவதாகவும் அதுவும் சில நாட்களில் தாமதமாகவும்  சில வேலைகளில் வருவதே இல்லை என்றும் குறிப்பிட்டர்; .அனைவருக்கும் மின்சாரம் இல்லாதது பெரும் பிரச்சனையாகவே காணப்படுகின்றது
அதன் பின்  கிராம வாயிலில் உள்ள  பெட்டிக்கடைக்குள் சென்ற போது உரிமையாளர் கொளரிதாஸ்   இரானுவத்தினருடன் உரையாடிக் கொன்டிருந்தார். சிறிது நேரத்தில்  அவர்கள் வெளியோறியவுடன் உள்நுழைந்தோம.; தகரத்தினால் வேயப்பட்டிருந்தது. யாழ்பாணத்தை விட்டு விசுவமடுவிற்கு 1995 ஆம் ஆண்டு ஏற்பட்ட யுத்தத்தின் போது இடம் பெயர்ந்து சென்றார் எனவும் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது புதுமாத்தளனில்  ஏற்பட்ட செல்வீச்சில் இடுப்புப் பகுதியிலும் முதுகுப்பகுதியிலும் கடுமையான காயம் ஏற்பட்டது என கூறும் போதே அதன் வலியை தனது முகபாவனையூடாக வெளிக் கொனர்ந்தார். 
தற்போதும் செல் பாகங்கள் உடம்பிற்குள் இருப்பதாகவும் பாரிய வேலைகளை செய்யமுடிவதில்லை எனவும்; இக்கடையினால் மாதவருமானம் வெறுமென 3000 ரூபாய் மட்டுமே. இதை வைத்து என் குடும்பத்தை கொண்;டு நடத்த சிரமமாக உள்ளது எனவும் தெரிவித்தார். தினமும் திருநெல்வேலி சந்தையில் மரக்கறி மற்றும் ஏனைய பொருட்களை எடுத்து வருவதாகவும் முன்பைவிட தற்போது அதிக அளவு மக்களின் நடமாட்டம் இருப்பதால் வியாபாரம் ஓரளவு பரவாயில்லை என்றும் குறிப்பிட்டார்
மேலும் அவர் தெரிவிக்கையில் இராணுவத்தினரால் அமைத்துத் தரப்பட்ட வீடுகள் ‘லைலா’ புயலின் தாக்கத்தின் பின் முற்றாக அழிவடைந்ததாகவும் அதன் பின் அனைவரும் தாமாகவே வீடுகளை அமைத்துக் கொண்டனர் எனவும் கூறினார்.

மேலும் நாம் அக்கிராமத்தை பார்வையிட்ட போது இலங்கை இரானுவத்தினரின் அன்பளிப்பு என்ற பலகை தொங்கவிடப்பட்டவாறு ஓரு வீடு மட்டுமே காணப்பட்டது. இராணுவத்தினரால் அமைத்துக் கொடுக்கப்பட்ட மற்றய வீடுகளின் தடையங்களே காணப்படவில்லை.
நாம் அக்கிராமத்திற்கு சென்ற போது ஏற்படாத மனநிலை வெளியேறும் போது ஏதோ ஒன்று மனதை கசக்கிப் பிளிந்து கொண்டிருந்தது.
சொந்த மண்ணில் இடம் பெயர்ந்து காடுகளிடையேயும் பற்றை களிடையேயும் மீள்குடியேற்றப்பட்ட பெயரில் அவர்கள் படும் இன்னல்கள் எப்போதுதான்  வெளியுளகிற்க்கு  தெரியப்      போகின்றனவோ?   வார்தைகள்  தான்டிய பேரவலத்தில்  இருப்பவர்களைப்பற்றி எத்தனை வரிகளாளும் தாள்களில் நிரப்பிவிடலாம்.!

இவற்றை வைத்துப் பார்கும் போது போருக்கு பின்னரான அழிவுகள் போரை விட மிக மோசமானவை என்று தான் சொல்ல வேண்டும். மின்சார வசதியின்மை மற்றும் கழிப்பிட வசதியின்மை என்பன பெரும் சவால்களாகியுள்ளன. இவை தவிர இங்குள்ள பெரும்பாலன மக்கள் கோரமான உளவியல் தாக்கங்களின் சாட்சியங்களாக உள்ளனா.; தடுப்பு முகாம் வாழ்கை பெரும் சுமையாக இருந்துள்ளமை  தெட்டத் தெளிவாக தெரிகின்றது மீள்குடியேற்றப்பட்ட பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்வதற்கான    உதவித்  திட்டங்கள் முன்னெடுக்கப் பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்ட பொழுதும் அவர்களின் வாழ்வில் எவ்வித முன்னேற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை என்றே தான் கூறவேன்டும்.       
  


வடக்கில் கடந்த காலங்களில் இடம்பெற்ற அசாதாரன சூழ்நிலையினால் மக்கள்தம் இயல்பு வாழ்வுக்கு திரும்ப முடியாமல் தற்பொழுதும் நலன்புரி நிலையங்களிலும் தடுப்பு முகாம்களிலும் தமது கனவுகளை கலைத்துக்கொன்டு வாழ்கின்றனர் இவர்களில் ஒரு பகுதியினர் ஏக்கத்துடன் பல்வேறு சவால்களுக்குமத்தியில் தமது சொந்த இடங்களுக்கு மீள் குடியேறியுள்ளனர்.

Monday, July 18, 2011

சிலுவைப் போர்!

சிலுவைக் குறியை ஆடையில் தரித்துக்கொண்டு புனிதபோர் நடத்ததிய கிறிஸ்வர்கள் “CRUSADERS’ என்று அழைக்கப்பட்டனர் “CRUSADE’ என்ற ஆங்கில வார்தை பிறந்ததும் அப்போது  தான்.

மகாபாராதக் கதை இந்திய மக்களிடையே பிரபலமாக இருந்த காலம் அதாவது சுமார் 2000 வருடங்களுக்கு முன்பு ஜெருசலேம் நகரில் பல புதிய மதங்கள் வேர்விட  ஆரம்பித்தன இயேசு அவதரித்தார் அப்போது மத்திய தரைக்கடல் நாடுகளில் பெரும் பகுதி ரோமானிய சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்தது “மன்னர் தான் கடவுள் -கடவுள் தான் மன்னர் என்ற கருத்தை மக்கள் மீது அரசு தீவிரத்தோடு திணித்திருந்த காலம் இயேசு வளர வளர கிறிஸ்தவ மதமும் வளர ஆரம்பித்தது அவரை தேவதூதன் தேவ குமாரன் என்று மக்கள் கொண்டாட ஆரம்பித்தனர் இவரை வளர விடுவது தங்களுக்கு ஆபத்து என்று ரோமானிய அரசு அஞ்சியது அதனால் அரசக்கு எதிராக புரட்சியைத் தூண்டுகிறார் என்று குற்றம் சுமத்தப்பட்டு அவர் சிலுவையில் அறையப்பட்டார்.அப்போது இயேசுவுக்கு வயது 33.
சிங்கங்களுக்கு இரையானார்கள்
தொடர்ந்து கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப முயன்ற பால் பீட்டர் என்ற இயேசுவின் இரண்டு சீடர்களும் கொடுரமாக கொல்லப்பட்டார்கள் .கிறிஸ்தவ மதத்தை பரப்ப முயன்ற பல பாதிரியார்களை ஆட்சியாளர்கள் கொலோஸியம் என்ற பிரமான்டமான திறந்த வெளி மைதானத்தில் சிங்கங்களுக்கு உணவாகத் தள்ளினார்கள்.
சிலுவைப்போர்
பதினோராம் நூற்றாண்டு அப்போது இஸ்லாமிய ஆட்சியாளர்களின் ஆதிக்கத்துக்கு ஜெருசலேம் கைமாறியிருந்தது தங்கள் புனித நகரை மீட்க அப்போது போப்பாண்டவராக இருந்த இரண்டாம் அர்பன் “போர் முரசு” கொட்டினார் சிலுவைக்குறியை ஆடையில் தரித்துக் கொண்டு ஜெருசலேம் நோக்கி ஐரோப்பிய மக்கள் படையெடுத்துச் சென்றார்கள் புனித நகரமாக மாறியது
அடுத்து வந்த நூறு ஆண்டுகள் அது போன்ற ஐந்து புனித போர்களைச் சந்தித்தன கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் ஆளுமையின் கீழ் ஜெருசலேம் மாறி மாறி வந்தது
சிலுவைப் போரில் பல  ஆயிரம் பேர் உயிர்விட்டார்கள்!


பணம் கொடுத்தால் பாவமன்னிப்பு!

சுமார் 1517ம் ஆண்டு ஐரோப்பிய ஆட்சியாளர்கள் பலரும் பொறாமையில் பொசுங்கும் அளவிற்க்கு கிறிஸ்தவ தேவாலயங்களில் செல்வமும் அதிகாரமும் குவிந்தன
இதே நேரம் ஜெர்மனியில் டெட்சூல் என்ற ஒரு பாதிரியார் “பணம் கொடுத்தால் பாவமன்னிப்பு கிடைக்கும்” என்று சொல்லி நாடெங்கும் பாமரர்களிடம் ஏராளமாக பணம் பறிக்க ஆரம்பித்தார்
இதை எதிர்த்து ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மார்டின் லூதர் என்ற இன்னொரு பாதிரியார் கோபமாக குரல் எழுப்பினார் கத்தோலிக்கத் தேவாலயங்களில பல சம்பிரதாயங்களையும் இவர் கடுமையாக எதிர்த்தார் கிறிஸ்தவ மதம் இரண்டாக உடைந்தது .இவர் கத்தோலிக்க வழிபாட்டு முறையை protest செய்ததால் இவரைப்பின்பற்றியவர்கள் Protestants என்று அழைக்கப்பட்டார்
மார்டின் லூதரை அடுத்து ஜான்கேல்வின் என்பவர் வேறு மாதிரியான சீர்திருத்தங்களைச் சொன்னார் கிறிஸ்தவ மதம் மேலும் உடைந்தது கேல்வினிஸிம் அல்லது ப்யூரிட்டானிஸம் (Puritanism) என்று இன்னொரு புதிய மதம் பிறந்தது.


Friday, July 15, 2011

ஆயுதம் ஏந்திய அமைச்சர்!

che guevara
ஆயுதம் ஏந்திய அமைச்சர்!
(அமைச்சராக இருந்த ஒருவர் மீண்டும் போராளியாக மாறி யுத்தம் செய்தார் என்றால் அது செகுவாரா மட்டும் தான்)

1965ம் ஆண்டு அது உலகத்தின் எந்தத மூலையாக இருந்தாலும் சரி..இரண்டு கம்யூனிஸ்ட்டுக்கள் சந்தித்துக் கொண்டால் அவர்கள் ஒருவரை ஒருவர் கேட்கும் முதல் கேள்வி இதுவாகத்ததான் இருந்தது - “அவர் எங்கே இருக்கிறார்?”
ஆவர் என்று அவர்கள் குறிப்பிட்டது செகுவாராவை!
யார் இவர்?செங்கொடிக்கும் அரிவாள் சுத்திக்கும் அடுத்தபடியாக கம்யூனிஸ்டுக்களின் சின்னமாகவே மாறியவர் இந்த செகுவாரா! கார்ல் மார்க்ஸ{ம் லெனினும் கவரத் தவறியவர்களைக் கூட செகுவரா ஆயுதம் ஏந்திய போராளி ! கம்யூனிஸ்ட் அரசாங்கம் மலர்வதற்க்கு அஸ்திவாரம் போட்டவரே இந்த செ குவாரா தான்
இத்தனைக்கும்  செகுவாரா அர்ஜென்டினாவின் செல்வச செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்தவர் மருத்துவம் படித்த இவர் டாக்டர் தொழிலைச் செய்யவே முதலில் விரும்பினார்
ஆனால் காலம் அப்போது அவருக்கு வேறு பாடத்தை கற்றுத்தந்தது கௌதமாலா நடந்து வந்த ஒர் ஆட்சியை அமெரிக்க அரசாங்கம் தனது சுயநலத்துக்காக தூக்கியெறிந்தது இதைப்பார்த்து செ குவாரா துடித்தார்.தங்களின் அரசாங்கத்தை அமெரிக்கா தூக்கியெறிந்ததைப் பார்த்து துணுக்குறாத அந்த நாட்டு மக்களின் மௌனம் செ குவாரா மேலும் துடிக்கச் செய்தது அமெரிக்காவின் இந்த அடடூழியத்தை விரித்து செ குவாரா புரட்சி வெடிக்க பேச அவருக்கு ஆபத்து வந்தது செ குவாரா மெக்ஸி;கோவுக்கு தப்பி ஓடினார் அந்த சமயம் கியூபா நாட்டில் ஆட்சி செய்து வந்த பாடிஸ்டாவுக்கு எதிரான கொரிலாப்படை திரட்டி போராடுவதற்க்கு ஃபிடல் காஸ்டோவின் அறிமுகம் கிடைத்தது.முதல் சந்திப்பிலேயே பலமான நட்பு மலர்ந்தது இருவருக்கும்
காஸ்டோவின் தலைமைத் தளபதி ஆனார் செ குவாரா இவரின் வீரமும் கொரிலாப்படை சாகசங்களும் கியூபாவை சக்கரவர்தியை வீழ்த்தி காஸ்டோவின் கையில் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்தது இதன் பின் செ குவாரா கீயூபாவின் பொருளாதார அமைச்சராகினார் காஸ்ரோ. கியூபாவை பன்னெடும் காலமாக சுரண்டிவந்த அமெரிக்கா நிறுவனங்களின் உடைமைகளை இவர் பறிமுதல் செய்தார் கீயூபாவின் சுதந்திரத்துக்கு தன்னோடு போராடிய ஒரு கொரில்லா பெண் போராளியை மணந்து இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவானார்.இருந்தாலும் செ குவாராவால் அந்த வாழ்கையில் நீடிக்கமுடியவில்லை காரணம் அப்பொது காங்கோ நாட்டில் புரட்சியில் ஈடுபட்டிருந்த கொரிலாக்களுக்கு செ குவாராவின் வழிகாட்டுதல் தேவைப்பட்டது

இரும்புத் தலைவன் ! ஃபிடல் காஸ்டோ

fidel castro

(உலகம் மூன்றாம் உலகப் போரை நோக்கிப் போய்கொண்டிருக்கிறதோ? ஏன்று அச்சம் எழுந்தது)
நாற்பது வருடங்களாக ஒரு நாட்டைத் தொடர்ந்து தனது இரும்புப் பிடிக்குள் வைத்திருக்கும் ஒரு தலைவன் உண்டு என்றால் இன்றைய தேதிக்கு ஃபிடல் காஸ்டோ மட்டுமே !
காஸ்ரோவின் வாழ்கையில் பல விந்தையான விஷயங்கள் நடந்திருக்கின்றன தனது நாட்டைச் சுரண்டிக்கொண்டிருந்த சர்வதிகாரி பாடிஸ்டாவை எதிர்தது காஸ்ரோ கொரிலா போரில் ஈடுபட்டிருந்த சமயம் அவர் தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என்றே சொல்லிக்கொள்ள வில்லை கியூபாவில் ஃபிடல் காஸ்டோ ஆட்சிக்கு வந்த புதிதில் கியூபாவின் கம்னீயூஸ்ட் கட்சியே அவரை கடுமையாக எதிர்த்ததுஅப்படியென்றால் ஃபிடல் காஸ்டோவை திடீரென்று கம்யூனிஸ்ட் ஆக்கியது யார்? சோவியத் ரஷ்யாவா? இல்லை அமெரிக்கா! 
கீயூபாவில் ஃபிடல் காஸ்டோ ஆட்சியைக் கைப்பற்றிய போது பாடிஸ்டாவின் ஆதரவாளர்களையும் அவருக்கு விசுவாசமானவர்களையும் கடுமையாக நடத்தினார் இவர்களைத் தேடி ஃபிடல் காஸ்டோவின் படைகள் வீடுவீடாக வேட்டை நடத்திய போது பலர் மூர்க்கத்தனமாக கொல்லப்பட்டார்கள் இந்த அடக்கு முறையையும் கொலைகளையும் அப்போது அமெரிக்கா கடுமையாக எதிர்த்தது
இன்னொரு பக்கம் புதிதாக ஆட்சப்பொறுப்பேற்ற ஃபிடல் காஸ்டோ அமெரிக்கர்கள் கீயூபாவில் நடத்தி வந்த அத்தனை சக்கரைத் தொழிற்சாளைகலையும் வர்த்தக நடவடிக்கைகளையும் அரசுடமையாக்கினார் இதற்க்கு பதிலடி பொடுக்க அமெரிக்கா இனி கீயூபாவில் இருந்து சக்கரையை இறக்குமதி செய்ய மாட்டோம் என்று அறிவித்திருந்தது கீயூபாவைப் பொறுத்தவரை சக்கரை ஏற்றுமதிதான் அதன் சுவாசக்காற்றே இந்தச் சமயம் நான் உனது சக்கரையை வாங்கிக் கொள்கிறேன் என்று ரஷ்யா ஆபத்பாந்தவானாக முன் வந்தது அத்துடன் புதிய கனரக தொழிற்சாலைகள் அமைக்கும் கீயூபாவுக்கு ரஷ்யா பெரும் உதவி புரிந்தது

Wednesday, July 13, 2011

மனித மிருகம் (இட அமின்)


இட அமின் -உச்சரிக்கும் பேதே நம்மை உலுக்கிப் போடுகிற பெயர் !முந்நூறு பவுண்டு எடையுடன் ஆரடி முன்று அங்குல உயரமான ராட்சதன்  மாதிரி தோற்றமளித்த இவர் மூன்று லட்சம் பேரைக் கொன்று குவித்தவர்.நீர்யானையின் கல்லீரலிலிந்து மனித மாமிசம் வரை இவர் சாப்பிட்டிருக்கிறார் என்று இவருடன் நெருங்கிப் பழகிய ராணுவ அதிகாரிகள் வாக்குமூலம் கொடுத்திறுக்கிறார்கள்.பாலியல் நோய் வரும் அளவுக்கு பல பெண்களோடு பொட்டம் அடித்தவர் .நடு ரோட்டில் நிர்வாணமாக ஓடியவர் என்ற பெருமையும்  இடி அமீனுக்கு உண்டு இடி அமீன் ராணுவத்தில் பணியாற்றிய சமயம் சக ராணுவ வீரனின் மனைவியோடு உல்லாசமாக இருந்தபோது கையும் களவுமாக பிடிபட மேலே சொன்ன சம்பவம் இடம் பெற்றது.அதிகார வெறி இவரை ஆட்டிப்படைத்தது ராணுவத்தில் சமையல் காரனாக இருந்த இடி அமீனுக்கு முக்கிய பொறுப்புக்களும் பதவி உயர்வும் பொடுத்து நாட்டின் தளபதி பதவிக்கு உயர்தியவர் ஜனாதிபதி மில்டன் ஓபோட்.
வுளர்த்த கடா மார்பில் பாய்வது பொல அவரையே .இவர் இரத்தம் தெறிக்க ராணுவப் புரட்சி நடத்தி ஆட்சியினை விட்டு விரட்டினார்.இது  நடந்தது 1971ம் ஆண்டு!இடி அமீன் வீழ்த்pய ஜனாதிபதி சோஷலிஸ் சித்தாந்தத்தின் பக்கம் சாயக்கூடியவர் என்ற சந்தேகம் இருந்தால் அமெரிக்காவும் இங்கிலாந்தும் கூட அப்போது இடி அமீனை ஆதரித்தன
எழுதப்படிக்ககூடத் தெரியாத இடி அமீன் கைகளுக்கு உகன்டாவின் தலையெழுத்தையே எழுதக்கூடிய அதிகாரம் கிடைத்த போது அவர் அடித்த கொட்டங்களுக்கு அளவே இல்லை உழஅஅநnஎநடவா நாடுகளின் தலைவன் இங்கிலாந்தை வென்ற வீரன் ஸ்கொட்லாந்தின் கடைசி மன்னன்..டாக்டர் என்று வாய்க்கு வந்த பட்டங்களை எல்லாம் அவர் தனக்குத் தானே வழங்கிக் கொண்டார். தனது அகலமான மார்பே மறையும் அளவுக்கு ராணுவத்தின் எத்தனை பதக்கங்கள் உண்டோ அத்தனையும் எடுத்துச் சட்டையில் குத்திக் கொண்டார்!
துன்னைப்போல எழுதப்படிக்கத் தெரியாதவர்களைNயு அமைச்சர்களாகவும் ராணுவ உயர்அதிகாரிகளாகவும் நியமித்தார் அடுத்தடுத்து நாட்டின் பொருளாதாரமும் நிர்வாகமும் சீர்குலைந்தன .நாட்டு மக்கள் இடி அமீனுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்குமு; நிலை உரு வெடுத்தது
ஊகண்டா நாட்டில் இருக்கும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டினார்.இதில் கிறிஸ்தவ மத ஆர்ச்பிஷப் உட்பட பல்லாயிரம் பேர் படுபொலை செய்யப்பட்டனர் .தனது கைகளில் இருந்து ஆட்சி நழுவி வீடுமோ என்ற பயம் இடிஅமினுக்கு வர ..அவரது கொலைவெறி அதிகமாகியது தன்னை எதிர்த்துப் பேசிய காபினெட் அமைச்சர் களையே அவர் கொன்றார் அதிகார வாழ்கையிலும் அவர் பொலைவெறியுடன் தான் இருந்தான்