Friday, July 15, 2011

ஆயுதம் ஏந்திய அமைச்சர்!

che guevara
ஆயுதம் ஏந்திய அமைச்சர்!
(அமைச்சராக இருந்த ஒருவர் மீண்டும் போராளியாக மாறி யுத்தம் செய்தார் என்றால் அது செகுவாரா மட்டும் தான்)

1965ம் ஆண்டு அது உலகத்தின் எந்தத மூலையாக இருந்தாலும் சரி..இரண்டு கம்யூனிஸ்ட்டுக்கள் சந்தித்துக் கொண்டால் அவர்கள் ஒருவரை ஒருவர் கேட்கும் முதல் கேள்வி இதுவாகத்ததான் இருந்தது - “அவர் எங்கே இருக்கிறார்?”
ஆவர் என்று அவர்கள் குறிப்பிட்டது செகுவாராவை!
யார் இவர்?செங்கொடிக்கும் அரிவாள் சுத்திக்கும் அடுத்தபடியாக கம்யூனிஸ்டுக்களின் சின்னமாகவே மாறியவர் இந்த செகுவாரா! கார்ல் மார்க்ஸ{ம் லெனினும் கவரத் தவறியவர்களைக் கூட செகுவரா ஆயுதம் ஏந்திய போராளி ! கம்யூனிஸ்ட் அரசாங்கம் மலர்வதற்க்கு அஸ்திவாரம் போட்டவரே இந்த செ குவாரா தான்
இத்தனைக்கும்  செகுவாரா அர்ஜென்டினாவின் செல்வச செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்தவர் மருத்துவம் படித்த இவர் டாக்டர் தொழிலைச் செய்யவே முதலில் விரும்பினார்
ஆனால் காலம் அப்போது அவருக்கு வேறு பாடத்தை கற்றுத்தந்தது கௌதமாலா நடந்து வந்த ஒர் ஆட்சியை அமெரிக்க அரசாங்கம் தனது சுயநலத்துக்காக தூக்கியெறிந்தது இதைப்பார்த்து செ குவாரா துடித்தார்.தங்களின் அரசாங்கத்தை அமெரிக்கா தூக்கியெறிந்ததைப் பார்த்து துணுக்குறாத அந்த நாட்டு மக்களின் மௌனம் செ குவாரா மேலும் துடிக்கச் செய்தது அமெரிக்காவின் இந்த அடடூழியத்தை விரித்து செ குவாரா புரட்சி வெடிக்க பேச அவருக்கு ஆபத்து வந்தது செ குவாரா மெக்ஸி;கோவுக்கு தப்பி ஓடினார் அந்த சமயம் கியூபா நாட்டில் ஆட்சி செய்து வந்த பாடிஸ்டாவுக்கு எதிரான கொரிலாப்படை திரட்டி போராடுவதற்க்கு ஃபிடல் காஸ்டோவின் அறிமுகம் கிடைத்தது.முதல் சந்திப்பிலேயே பலமான நட்பு மலர்ந்தது இருவருக்கும்
காஸ்டோவின் தலைமைத் தளபதி ஆனார் செ குவாரா இவரின் வீரமும் கொரிலாப்படை சாகசங்களும் கியூபாவை சக்கரவர்தியை வீழ்த்தி காஸ்டோவின் கையில் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்தது இதன் பின் செ குவாரா கீயூபாவின் பொருளாதார அமைச்சராகினார் காஸ்ரோ. கியூபாவை பன்னெடும் காலமாக சுரண்டிவந்த அமெரிக்கா நிறுவனங்களின் உடைமைகளை இவர் பறிமுதல் செய்தார் கீயூபாவின் சுதந்திரத்துக்கு தன்னோடு போராடிய ஒரு கொரில்லா பெண் போராளியை மணந்து இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவானார்.இருந்தாலும் செ குவாராவால் அந்த வாழ்கையில் நீடிக்கமுடியவில்லை காரணம் அப்பொது காங்கோ நாட்டில் புரட்சியில் ஈடுபட்டிருந்த கொரிலாக்களுக்கு செ குவாராவின் வழிகாட்டுதல் தேவைப்பட்டது


கண்ணீர்மல்க தனது நண்பர் காஸ்டோவுக்கு இவர் கடிதம் எழுதிவிட்டு திடீரென தலைமறைவானார் அவர் நண்பர்களும் சரி எதிரிகளும் சரி “அவர் எங்கே என்று பதட்டத்தோடு தேடினார் காஸ்டோவுக்கும் - செ குவாராவுக்கும் கருத்து வேறுபாடு அதனால் தான் செ குவாராவை கியூபாவை விட்டு வெளியேற்றி விட்டார் காஸ்ரோ…இல்லை உலகத்தை விட்டே வெளியேற்றி விட்டார்” என்று அமெரிக்கா பொய் பிரசாரம் செய்தது இன்னொரு புறம் அது தனது உளவு ஸ்தாபனமான சி.ஐ.ஏ-வை விட்டு செகுவாராவை உலகம் முழுக்க  சல்லடை போட்டுத் தேடியது ஆனால் காங்கோ நாட்டின் அடர்ந்த காடுகளில் கம்யூனிஸ்ட் கொரில்லா வீரர்களுக்கு போர்பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்த செகுவாரா அப்போது யார் கண்களுக்கும் தென்படவில்லை
சுமார் இரண்டு வருட காலத்தை காங்கோ நாட்டுக் காடுகளில் கழித்தார் செகுவாரா பொலிவியா நாட்டின் பழங்குடி மக்கள் அப்போது பொருளாதாரரீதியில் அமெரிக்கா அரசால் நசுக்கப்பட்டு வந்தன இதனால் செ குவாரா பொலிவியா சென்றார் அங்கே ஆட்சி செய்து வந்த அமெரிக்காவின் கைக்கூலி அரசாங்கத்துக்கு எதிராக கொரில்லா யுத்தம் நடத்தினார் அமைச்சராக இருந்த ஒருவர் மீண்டும் போராளியாக மாறி யுத்தம் செய்தார் என்றால் வரலாற்றில் அது செகுவாரா மட்டும் தான்
எதிரிகளுக்குத் தெரியாமல் காடுகளில் அவர் ஒளிந்திருந்த ஒரு சமயம் செகுவாராவால் பயிற்சி அளிக்கப்பட்ட துரோகி ஒருவன் அமெரிக்காவின் உளவுஸ்தாபனமான சி.ஐ.ஏ –வுக்கு செகுராவின் இருப்பிடம் பற்றித் துப்புக் கொடுக்க  பொலியாவின் ராணுவம் ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய இவரின் மார்பை தோட்டாக்கள் சல்லடைக் கண்களாக துளைத்திருந்தது ஆனால் இந்த வீரன் அந்தச் சமயம் கூட தன் கண்இமைகளை மூடிக் கொள்ளவில்லை கண்கள் திறந்தபடியே அவர் உயிர் அவரைவிட்டுப் பிரிந்தது.


che guevara

che guevara

No comments:

Post a Comment