Friday, July 15, 2011

இரும்புத் தலைவன் ! ஃபிடல் காஸ்டோ

fidel castro

(உலகம் மூன்றாம் உலகப் போரை நோக்கிப் போய்கொண்டிருக்கிறதோ? ஏன்று அச்சம் எழுந்தது)
நாற்பது வருடங்களாக ஒரு நாட்டைத் தொடர்ந்து தனது இரும்புப் பிடிக்குள் வைத்திருக்கும் ஒரு தலைவன் உண்டு என்றால் இன்றைய தேதிக்கு ஃபிடல் காஸ்டோ மட்டுமே !
காஸ்ரோவின் வாழ்கையில் பல விந்தையான விஷயங்கள் நடந்திருக்கின்றன தனது நாட்டைச் சுரண்டிக்கொண்டிருந்த சர்வதிகாரி பாடிஸ்டாவை எதிர்தது காஸ்ரோ கொரிலா போரில் ஈடுபட்டிருந்த சமயம் அவர் தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என்றே சொல்லிக்கொள்ள வில்லை கியூபாவில் ஃபிடல் காஸ்டோ ஆட்சிக்கு வந்த புதிதில் கியூபாவின் கம்னீயூஸ்ட் கட்சியே அவரை கடுமையாக எதிர்த்ததுஅப்படியென்றால் ஃபிடல் காஸ்டோவை திடீரென்று கம்யூனிஸ்ட் ஆக்கியது யார்? சோவியத் ரஷ்யாவா? இல்லை அமெரிக்கா! 
கீயூபாவில் ஃபிடல் காஸ்டோ ஆட்சியைக் கைப்பற்றிய போது பாடிஸ்டாவின் ஆதரவாளர்களையும் அவருக்கு விசுவாசமானவர்களையும் கடுமையாக நடத்தினார் இவர்களைத் தேடி ஃபிடல் காஸ்டோவின் படைகள் வீடுவீடாக வேட்டை நடத்திய போது பலர் மூர்க்கத்தனமாக கொல்லப்பட்டார்கள் இந்த அடக்கு முறையையும் கொலைகளையும் அப்போது அமெரிக்கா கடுமையாக எதிர்த்தது
இன்னொரு பக்கம் புதிதாக ஆட்சப்பொறுப்பேற்ற ஃபிடல் காஸ்டோ அமெரிக்கர்கள் கீயூபாவில் நடத்தி வந்த அத்தனை சக்கரைத் தொழிற்சாளைகலையும் வர்த்தக நடவடிக்கைகளையும் அரசுடமையாக்கினார் இதற்க்கு பதிலடி பொடுக்க அமெரிக்கா இனி கீயூபாவில் இருந்து சக்கரையை இறக்குமதி செய்ய மாட்டோம் என்று அறிவித்திருந்தது கீயூபாவைப் பொறுத்தவரை சக்கரை ஏற்றுமதிதான் அதன் சுவாசக்காற்றே இந்தச் சமயம் நான் உனது சக்கரையை வாங்கிக் கொள்கிறேன் என்று ரஷ்யா ஆபத்பாந்தவானாக முன் வந்தது அத்துடன் புதிய கனரக தொழிற்சாலைகள் அமைக்கும் கீயூபாவுக்கு ரஷ்யா பெரும் உதவி புரிந்தது


கீயூபாவை பணியவைக்க தான் எடுத்த முயற்சிகளுக்கு இப்படி எக்குத்தப்பாக விளைவுகள் ஏற்படுவதைப் பார்த்து “எங்கே கீயூபா கம்யூனிஸ்ட் நாடாக மாறிவிடுமோ என்று அமெரிக்கா பயந்தது அமெரிக்காவின் உளவு ஸ்தாபனமான சி.ஐ.ஏ தனது நரித்தனத்தை காட்டியது.சுமார் 1400 கியூபாவை முற்றுகையிட ஆனுப்பியது ! பே ஆஃப் பிக்ஸ் என்று பெயரிடப்பட்ட இந்த படையெடுப்புக்கு கியூபா நாட்டு மக்கள் பெருமளவில் ஆதரவு அளிப்பார்கள் என்று அமெரிக்கா போட்ட கணக்கு தப்பானது! தன்னை ஒரு கம்யூனிஸ்ட் தன்னை எதிர்க்க அமெரிக்காவில் இருந்து  ஆயுதங்களோடு வந்தவர்களை வந்தவர்களை ஃ பிடல் காஸ்டோ மண்டியிட வைத்தது வெற்றியுரை நிகழ்த்தினர் அப்போதுதான் ஃபிடல் காஸ்டோ தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என்று முதல் முதலாக அறிவித்துக் கொண்;டார் அன்று தான் கீயூபாவையும் கம்யூனிஸ்ட் நாடாகப் பிரகடனப்படுத்தினர்!
அது மட்டுமல்ல கண்டம் விட்டுக் கண்டம் தாக்கக் கூடிய ஏவுகணைகளை கியூபாவில் பொருத்த ஃபிடல் காஸ்டோ சோவியத் ரஷ்யாவிற்க்கு அனுமதி கொடுத்தார் இந்தச் சந்தர்பத்துக்காகவே காத்துக்கொன்டிருந்த ரஷ்யா அமெரிக்காவை குறிபார்க்கும் ஏவுகனைகளை கியூபாவில் இருந்து கொண்டுவந்து பொருத்தியது ! அடுத்தடுத்து நடந்த இந்தச் சம்பவங்களைப்பார்த்து அமெரிக்கா அதிர்சியடைந்தது.உலகம் மூன்றாம் உலகப்போரை நோக்கிப் போய்கொண்டிருக்கிறதோ?என்று கூட அச்சம் எழுந்தது
அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த கென்னடி ரஷ்யாவின் அதிபர் குருஷேவ் உடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்தினர் அமெரிக்கா எடுத்த முயற்சிக்குப் பலன் கிடைத்தது ரஷ்யா தனது ஏவுகணைகளை கீயூபாவில் இருந்து தீரும்பப் பெற்றுக் கொண்டது இது நடந்து 1962ம் ஆண்டு ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை ஃபிடல் காஸ்டோவைப் பதவியில் இருந்து இறக்கவும் கியூபா மீது பதித்திருக்கும் கம்யூனிஸ்ட் நாடு என்ற முத்திரையைத் துடைக்கவும் அமெரிக்கா எடுக்காத முயற்சிகளே இல்லை! ஆனால் இதில் எந்த முயற்நியுமே ஃபிடல் காஸ்டோ முன் எடுபடவில்லை.


No comments:

Post a Comment