Monday, July 18, 2011

சிலுவைப் போர்!

சிலுவைக் குறியை ஆடையில் தரித்துக்கொண்டு புனிதபோர் நடத்ததிய கிறிஸ்வர்கள் “CRUSADERS’ என்று அழைக்கப்பட்டனர் “CRUSADE’ என்ற ஆங்கில வார்தை பிறந்ததும் அப்போது  தான்.

மகாபாராதக் கதை இந்திய மக்களிடையே பிரபலமாக இருந்த காலம் அதாவது சுமார் 2000 வருடங்களுக்கு முன்பு ஜெருசலேம் நகரில் பல புதிய மதங்கள் வேர்விட  ஆரம்பித்தன இயேசு அவதரித்தார் அப்போது மத்திய தரைக்கடல் நாடுகளில் பெரும் பகுதி ரோமானிய சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்தது “மன்னர் தான் கடவுள் -கடவுள் தான் மன்னர் என்ற கருத்தை மக்கள் மீது அரசு தீவிரத்தோடு திணித்திருந்த காலம் இயேசு வளர வளர கிறிஸ்தவ மதமும் வளர ஆரம்பித்தது அவரை தேவதூதன் தேவ குமாரன் என்று மக்கள் கொண்டாட ஆரம்பித்தனர் இவரை வளர விடுவது தங்களுக்கு ஆபத்து என்று ரோமானிய அரசு அஞ்சியது அதனால் அரசக்கு எதிராக புரட்சியைத் தூண்டுகிறார் என்று குற்றம் சுமத்தப்பட்டு அவர் சிலுவையில் அறையப்பட்டார்.அப்போது இயேசுவுக்கு வயது 33.
சிங்கங்களுக்கு இரையானார்கள்
தொடர்ந்து கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப முயன்ற பால் பீட்டர் என்ற இயேசுவின் இரண்டு சீடர்களும் கொடுரமாக கொல்லப்பட்டார்கள் .கிறிஸ்தவ மதத்தை பரப்ப முயன்ற பல பாதிரியார்களை ஆட்சியாளர்கள் கொலோஸியம் என்ற பிரமான்டமான திறந்த வெளி மைதானத்தில் சிங்கங்களுக்கு உணவாகத் தள்ளினார்கள்.
சிலுவைப்போர்
பதினோராம் நூற்றாண்டு அப்போது இஸ்லாமிய ஆட்சியாளர்களின் ஆதிக்கத்துக்கு ஜெருசலேம் கைமாறியிருந்தது தங்கள் புனித நகரை மீட்க அப்போது போப்பாண்டவராக இருந்த இரண்டாம் அர்பன் “போர் முரசு” கொட்டினார் சிலுவைக்குறியை ஆடையில் தரித்துக் கொண்டு ஜெருசலேம் நோக்கி ஐரோப்பிய மக்கள் படையெடுத்துச் சென்றார்கள் புனித நகரமாக மாறியது
அடுத்து வந்த நூறு ஆண்டுகள் அது போன்ற ஐந்து புனித போர்களைச் சந்தித்தன கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் ஆளுமையின் கீழ் ஜெருசலேம் மாறி மாறி வந்தது
சிலுவைப் போரில் பல  ஆயிரம் பேர் உயிர்விட்டார்கள்!


பணம் கொடுத்தால் பாவமன்னிப்பு!

சுமார் 1517ம் ஆண்டு ஐரோப்பிய ஆட்சியாளர்கள் பலரும் பொறாமையில் பொசுங்கும் அளவிற்க்கு கிறிஸ்தவ தேவாலயங்களில் செல்வமும் அதிகாரமும் குவிந்தன
இதே நேரம் ஜெர்மனியில் டெட்சூல் என்ற ஒரு பாதிரியார் “பணம் கொடுத்தால் பாவமன்னிப்பு கிடைக்கும்” என்று சொல்லி நாடெங்கும் பாமரர்களிடம் ஏராளமாக பணம் பறிக்க ஆரம்பித்தார்
இதை எதிர்த்து ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மார்டின் லூதர் என்ற இன்னொரு பாதிரியார் கோபமாக குரல் எழுப்பினார் கத்தோலிக்கத் தேவாலயங்களில பல சம்பிரதாயங்களையும் இவர் கடுமையாக எதிர்த்தார் கிறிஸ்தவ மதம் இரண்டாக உடைந்தது .இவர் கத்தோலிக்க வழிபாட்டு முறையை protest செய்ததால் இவரைப்பின்பற்றியவர்கள் Protestants என்று அழைக்கப்பட்டார்
மார்டின் லூதரை அடுத்து ஜான்கேல்வின் என்பவர் வேறு மாதிரியான சீர்திருத்தங்களைச் சொன்னார் கிறிஸ்தவ மதம் மேலும் உடைந்தது கேல்வினிஸிம் அல்லது ப்யூரிட்டானிஸம் (Puritanism) என்று இன்னொரு புதிய மதம் பிறந்தது.




மன்னரின் மதமே மக்களின் மதம்

இந்தக் காலகட்டத்தில் இங்கிலாந்தின் அரசர் எட்டாம் ஹென்றி தனது மனைவியை விவாகரத்து செய்ய அனுமதி மறுத்துவிட்டது அதனால் கோபம் கொண்ட மன்னன் தனது நாட்டில் இருக்கும் கத்தோலிக்க தேவாலயங்களுக்குத் தன்னையே தலைவராக நியமித்துக் கொன்டார் முன்னர் சொல்லும் மதத்தைத்த்தான் குடிமக்கள் பின்பற்ற வேண்டும் என்று சட்டம் கூட இயற்றினார்.
முன்னரின் மறைவுக்குப் பிறகு இங்கிலாந்தின் மகாராணியாக முடிசூட்டிக் கொண்டவர் மேரி .இவர் கத்தோலிக்க தேவாலயத்தின் பக்கம் மீண்டும் சாய நீங்கள் எல்லாம் மனதில் என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் ?என்று கேட்டு மக்கள் கொதித்தெழுந்தனர் மேரி எதிர்பாளர்களை நூற்றுக்கணக்கில் கொன்று குவித்தார் “Bloody Mary”  என்று சரித்திரம் குறிப்பிடும் அளவுக்கு அவர் ஆட்சியில் படுகொலைகள் நடந்தன
ஆதன் பின் வியாபாரத்துக்காக வர்தகர்களும் நாடு பிடிக்க ஜரோப்பியர்களும் ஆசியா அமெரிக்க ஆபிரிக்கா என்று கப்பல் ஏற அவர்களோடு கத்தோலிக்க மற்றும் ப்ராட்டஸ்டண்ட் மத போதகர்களும் சென்றார்கள்  கிறிஸ்தவ மதம் உலகம் முழுவதும் பரவியது இப்பொழுது உலகம் முழுவதும் 126 கோடி கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment